உள்ளூர் செய்திகள்

வனவிலங்களை காப்போம் என்பதை வலியுறுத்தி பேரணியாக சென்ற மாணவிகள்.

தஞ்சையில், மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-10-13 09:38 GMT   |   Update On 2023-10-13 09:38 GMT
  • மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.
  • பேரணியானது நகரின் முக்கிய இடங்களின் வழியாக சென்று பழைய கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

தஞ்சாவூர்:

உலக வனவிலங்கு தின விழாவை முன்னிட்டு தஞ்சையில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சிவகங்கை பூங்கா நுழைவாயில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினார்.

தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் மலர்விழி முன்னிலை வகித்தார். பேரணியை காலநிலை திட்ட அலுவலர் ஸ்ரீதர்ஷிணி முடித்து வைத்தார்.

இதில் கல்லூரி மாண விகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வனம் காப்போம், உயிர் காப்போம், வனவிலங்குகளை பாதுகாப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

செல்லும் வழியில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.

பேரணியானது பல்வேறு வழியாக சென்று பழைய கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

இந்த நிகழ்ச்சியை விலங்கியல் துறை தலைவர் சந்திரகலா ஒருங்கிணைத்தார்.

இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் ராஜசேகரன், கல்லூரி கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், பேராசிரியர்கள் சுகுமாறன், மணிவண்ணன், துரைராஜ், நாசர், வாசுகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News