உள்ளூர் செய்திகள்
புதிய தி.மு.க. ஒன்றிய செயலாளர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்த காட்சி.
ராயக்கோட்டையில் அண்ணாசிலைக்கு மாலை அணிவிப்பு
- அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் கொடுத்து கொண்டாடினார்.
- தி.மு.க. செயலாளராக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக இருந்த ஜி.எம்.சி.சின்னராஜ் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக இருந்த ஜி.எம்.சி.சின்னராஜ் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார்.
நேற்று கட்சி முன்னோடிகளை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துப்பெற்றார். அதன் பின் ராயக்கோட்டை நான்கு ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் கொடுத்து கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால், ஒன்றிய அவைத்தலைவர் ஜெயராமன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் முருகன், ராமி குணசேகரன், அருணாகிரி, பொருளார் பி.முருகன், பொறியாளர் அணி பெரியசாமி, குமரேசன், மாதேஷ், மாவட்ட பிரதிநிதிகள் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள்.