உள்ளூர் செய்திகள்

 போச்சம்பள்ளியில் நடைபெற்ற மின் சிக்கன மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி கொடியசைத்து தொடங்கி வைக்கின்றார்.

போச்சம்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-12-21 15:15 IST   |   Update On 2022-12-21 15:15:00 IST
  • மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாய மேரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
  • ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர் .ரங்கநாதன் முன்னிலை வகித்தனர்.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மின்கோட்டம் சார்பாக மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வார விழாவின் நிறைவாக போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி மின் பகிர்மான மாவட்ட மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாய மேரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணிக்கு போச்சம்பள்ளி மின்வாரிய செயற் பொறியாளர் இந்திரா தலைமை வகித்தார். இதில் ஓசூர் மின்வாரிய செயற் பொறியாளர் முனைவர்.கிருபானந்தம் மற்றும் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர் .ரங்கநாதன் முன்னிலை வகித்தனர்.

இப்பேரணியிலே வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் மின்சிக்கன கோஷங்கள் எழுப்பியவாறும், பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் விநியோகம், செய்தும் மின்சிக்கன வழிமுறைகளை சுட்டிகாட்டும் பதாகைகள் ஏந்தியவாறு முக்கிய சாலை வழியாக பேரணியாக சென்று போச்சம்பள்ளி காவல் நிலையம் அருகில் நிறைவடைந்தன.

இப்பேரணியில் போச்சம்பள்ளி உதவி செயற் பொறியாளர் ஸ்டாலின் , மத்தூர் உதவி செயற் பொறியாளர் மகாலட்சுமி, ஊத்தங்கரை உதவி செயற் பொறியாளர் மணி, பர்கூர் உதவி செயற்பொறியாளர் நாகராஜ் மற்றும் உதவி பொறியாளர்கள் மின் வாரிய மேற்பார்வையாளர்கள், மின் பாதை ஆய்வாளர்கள் மின் வாரிய பணியாளர்கள் கலந்து ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News