உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட புருஷோத்தமன், நவீன் குமார் 

பண்ருட்டியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை;2 பேர் கைது

Published On 2022-12-19 06:59 GMT   |   Update On 2022-12-19 06:59 GMT
கஞ்சாப் பொட்ட லங்கள் விற்பதால் லாபம் கிடைக்காது கஞ்சா செடி வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கஞ்சா செடி விதை கொடுத்தனர்.

கடலூர்:

பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) நந்த குமார் மற்றும் போலீ சார் கஞ்சா மற்றும் போதை பொருள் தடுப்பு சம்பந்த மாக கொக்கு பாளையம் சந்திப்பில் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 பேர் போலீ சாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தபோது, அவர்கள் பண்ருட்டி போலீஸ் லைன் 4-வது தெருவை சேர்ந்த புருஷோத்த மன் (வயது 20), பண்ருட்டி நவீன் குமார் (22) எனதெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் சேர்ந்து பண்ருட்டி வேதபுரீஸ்வரர் நகரில் உள்ள முருகன் என்ப வரின் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. கைதான வாலிபர் புருஷோத்தமன் போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்ப தாவது:-

நானும் நவீன்குமாரும் சிறு வயது முதல் நண்பர்கள். எங்கள் இருவருக்கும் மது, கஞ்சா பழக்கம் உண்டு. வாரத்தில் 2 நாட்கள் மட்டும் கொத்தனார் வேலைக்கு செல்வேன் மற்ற நாட்களில் அடையாளம் தெரியாத ஆட்கள் கொண்டுவந்து தரும் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தோம் அதில் அதிக லாபம் கிடைத்தது.

ஒரு முறை சென்னை சென்றபோது அங்கிருந்த ஒருவர் கஞ்சாப் பொட்ட லங்கள் விற்பதால் லாபம் கிடைக்காது கஞ்சா செடி வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கஞ்சா செடி விதை கொடுத்தனர். அதை வளர்க்க எங்கள் வீட்டில் இடம் இல்லாததால் எனது பெரியம்மா வீட்டில் வளர்த்து, அந்த செடியை விற்பனை செய்து வந்தோம். என்று கூறினர்.அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறை யில் அடைத்தனர்.

Tags:    

Similar News