உள்ளூர் செய்திகள்

பாலக்கோட்டில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்

Published On 2022-09-05 15:00 IST   |   Update On 2022-09-05 15:00:00 IST
  • சதுர்த்தி நாளன்று விநாயகரின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது.
  • ஊர்வலமாக கொண்டு சென்று ஒகேனக்கல் ஆற்றில் கரைத்தனர்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகரின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது.

தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்வது வழக்கம். பாலக்கோடு கல்கூடஅள்ளியில் வைக்கப்பட்டிருந்த 11 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு சிலைக்கு பூ, ஆப்பிள், ஆரஞ்சு, வெள்ளை எருக்கன் பூ, அருகம்புல் மாலை உள்ளிட்டவைகளால் அலங்கரிக்கப்பட்டு யாகம் வளர்த்து பூஜை செய்து சுவாமிக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டது இதையடுத்து சாமிக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் படைத்து பக்தர்கள் வழிபாடு செய்து வந்தனர்.

5-ம் நாளான நேற்று சுவாமியை கல் கூட அள்ளி, மந்தைவெளி, பஸ்நிலையம், தக்காளிமண்டி வரை மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு சென்று ஒகேனக்கல் ஆற்றில் கரைத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கருடன் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News