உள்ளூர் செய்திகள்

சாலையோர பள்ளத்தில் சிக்கி நின்ற கல்லூரி பஸ்சினை படத்தில் காணலாம்.

நெல்லிக்குப்பத்தில்சாலையோர பள்ளத்தில் சிக்கிய கல்லூரி பஸ்ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-10-30 14:18 IST   |   Update On 2023-10-30 14:18:00 IST
கல்லூரி பஸ்சின் இடது புற முன் சக்கரம் திடீரென பள்ளத்தில் சிக்கி சாலையிலேயே நின்று போனது.

கடலூர்:

நெல்லிக்குப்பம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிந்த இடத்தில் ஜல்லிகளை கொண்டு பள்ளத்தை மூடிவிட்டனர்.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நெல்லிக்குப்பம் பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்த சாலையில் தனியார் கல்லூரி பஸ் இன்று காலை சென்றது. அப்போது, கல்லூரி பஸ்சின் இடது புற முன் சக்கரம் திடீரென பள்ளத்தில் சிக்கி சாலையிலேயே நின்று போனது.

இதையடுத்து அவ்வழியே சென்றவர்களின் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிய பஸ்சினை கல்லூரி மாணவர்கள் மீட்டனர். இந்த சாலை குறுகிய சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News