உள்ளூர் செய்திகள்

நல்லூர் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட வேண்டும்

Published On 2023-04-07 15:11 IST   |   Update On 2023-04-07 15:11:00 IST
  • புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடமிருந்து 80-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.
  • பிரகாஷ் எம்.எல்.ஏ. சுட்டிக்காட்டிய அந்த பகுதியும் துறைக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படின் இந்த ஆண்டில் அறிவிப்பில் சேர்க்க, முதலமைச்சரின் அனுமதியை பெற்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்”.

ஓசூர்,

ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், நேற்று சட்டசபையில் பேசியதாவது:-

"எனது ஓசூர் தொகுதிக்குட்பட்ட நல்லூர் ஊராட்சி, சேவகானபள்ளி ஊராட்சி மற்றும் ஈச்சங்கர் ஊராட்சி பகுதிகளில் மின்னழுத்தம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, நல்லூர் ஊராட்சி, ஓசூர் மாநகராட்சியை ஒட்டியும், குடியிருப்புகள் அதிகம் உள்ள காரணத்தினாலும் அங்கு ஒரு துணை மின் நிலையம் அமைக்க அரசு முன் வருமா?

இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்த ஆண்டு புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடமிருந்து 80-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அந்த கோரிக்கைகள், துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

எனவே, பிரகாஷ் எம்.எல்.ஏ. சுட்டிக்காட்டிய அந்த பகுதியும் துறைக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படின் இந்த ஆண்டில் அறிவிப்பில் சேர்க்க, முதலமைச்சரின் அனுமதியை பெற்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாசின் கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

Tags:    

Similar News