உள்ளூர் செய்திகள்

பயிற்சி வகுப்ைப அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

நாகையில், போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

Published On 2023-06-17 13:04 IST   |   Update On 2023-06-17 13:04:00 IST
  • தேர்விற்கு பயிற்சி பெற புத்தகங்கள் மற்றும் இணைய வழி கூப்பன்களை வழங்கினார்.
  • மாணவர்கள் தங்களுக்கென ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொள்ள வேண்டும்.

நாகப்பட்டினம்:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் நாகையில் ஓரு தனியார் கல்லூரியில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்துக்கான போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.

போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து மாணவர்களுக்கு தேர்விற்கு பயிற்சி பெற புத்தகங்கள் மற்றும் இணைய வழி தேர்வுக்கான கூப்பன்களை வழங்கினார்.

தொடர்ந்து பேசி அமைச்சர், மாணவர்கள் அனைவரும் தங்களுக்கென ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், தங்களையும்தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள இந்த பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கும்.ஒவ்வொருவரும் வாழ்வில் முன்னேற்றம் பெற போட்டித் தேர்வுகளை எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தாட்கோ தலைவர் மதிவாணன், தமிழக மீன் வளர்ச்சி தலைவர் கௌதமன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, மாவட்ட வருவாய் அலுவலர் வீ.சகிலா உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News