உள்ளூர் செய்திகள்

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறையில், ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

Published On 2023-03-07 09:50 GMT   |   Update On 2023-03-07 09:50 GMT
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
  • ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கைகள் வரும் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்ற வேண்டும்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருங்கிணைப்பாளர்கள் இளவரசன், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். செல்வம், அசோக் குமார், முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொருளாளர் அன்பரசன் வரவேற்றார். நடைபெற்ற போராட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

இதில் உரையாற்றிய தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான மாயவன் பேசுகையில்:-

ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கைகள் வரும் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்ற வேண்டும்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மார்ச் 20 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நாளன்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பு கூட்டத்தை கூட்டி மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்படும் என்றார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News