உள்ளூர் செய்திகள்
மத்தூர் பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 2 பேர் கைது
- மகேந்திரன் என்பவர் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது.
- அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மத்தூர் ,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள மாதம்பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது மகேந்திரன் (வயது 40) என்பவர் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல ஜி.டி.குப்பம் பகுதியில் மல்லிகா (57) என்ற பெண் மதுபாட்டில்களை விற்று பிடிபட்டார்.
அவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.