உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை பேரூராட்சி இயக்குநர் கிரண் குராலா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி. 

வாழப்பாடியில்பஸ் நிலையம், எரிவாயு தகன மேடை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

Published On 2023-05-08 13:07 IST   |   Update On 2023-05-08 13:07:00 IST
  • ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி மற்றும் வாழப்பாடி மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  • வாழப்பாடி பேரூராட்சிக்கு நேற்று திடீரென வந்த தமிழக பேரூராட்சி இயக்குநர் கிரண் குராலா, இந்த பணிகளை ஆய்வு செய்தார்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில், ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி மற்றும் வாழப்பாடி மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வாழப்பாடி பேரூராட்சிக்கு நேற்று திடீரென வந்த தமிழக பேரூராட்சி இயக்குநர் கிரண் குராலா, இந்த பணிகளை ஆய்வு செய்தார். முக்கியத்துவம் வாய்ந்த இரு திட்டப்பணிகளையும் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டுமென, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, சேலம் மண்டல உதவி இயக்குநர் கணேஷ்ராம், செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் மணிகண்டன், கணேசமூர்த்தி, வாழப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், உதவி பொறியாளர் தினேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News