எடப்பாடி அருகே குரும்பபட்டி ரெட்டிபட்டி கிருஷ்ண பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழாவையொட்டி சாமி தேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் திருவீதியுலா வந்த காட்சி.
குரும்பபட்டி ரெட்டிபட்டியில் கிருஷ்ண பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா
- குரும்பபட்டி ஊராட்சியில் உள்ள ரெட்டிபட்டி கிருஷ்ண பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா இன்று நடைபெற்றது.
- பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குரும்பபட்டி ஊராட்சியில் உள்ள ரெட்டிபட்டி கிருஷ்ண பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா இன்று நடைபெற்றது. விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
இதைதொடர்ந்து, கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. மேளதாளம் முழங்க சாமி முக்கிய வீதி வழியாக கோயிலை வந்தடைந்தார். பின்னர், சுவாமிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சீரங்க கவுண்டர் வகையார் தர்மலிங்கம் ஊர் கவுண்டர் வெங்கடாசலம் ஆகியோர் செய்து இருந்தனர்.