உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கையேடுகளை, கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கிய போது எடுத்த படம்.

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

Published On 2022-06-21 14:57 IST   |   Update On 2022-06-21 14:57:00 IST
  • வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 204 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
  • அனைத்து திட்டங்கள் தொடர்பான சந்தேகங்கள், புகர்கள் குறித்து தொலைபேசி எண்கள் மற்றும் விழிப்புணர்வு கையேடுகளை பயனாளி களுக்கு கலெக்டர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.

இதற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் சாலை வசதி, மின்சார வசதி, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 204 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கமலா என்பவரின் மகன் சக்தி என்பவர் பாம்பு கடித்து இறந்ததையொட்டி, சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

மேலும் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், அனைத்து திட்டங்கள் தொடர்பான சந்தேகங்கள், புகர்கள் குறித்து தொலைபேசி எண்கள் மற்றும் விழிப்புணர்வு கையேடுகளை பயனாளி களுக்கு கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் ராஜேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, உதவி திட்ட அலுவலர் ஷகிலா, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News