உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் சரக அளவிலான செஸ் போட்டி

Published On 2023-08-12 16:02 IST   |   Update On 2023-08-12 16:02:00 IST
  • அரசு , தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 345 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
  • 11, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மகாராஜகடை அரசு உயர் நிலைப்பள்ளி சார்பில், சரக அளவிலான செஸ் போட்டிகள் நேற்று நடந்தது. இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 345 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 11, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை, நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன், மகராஜகடை அரசு உயர்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர் மேரி ரோஸ்லின், பெற்றோர் கழக தலைவர் வஜீர், உடற்கல்வி ஆசிரியர் பார்த்தீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் 3 மாணவர்கள், 3 மாணவிகள் என மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

Similar News