உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-30 15:30 IST   |   Update On 2023-03-30 15:30:00 IST
  • தொடக்க ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்புச் சட்டத்தை ஏற்ற வேண்டும்

கிருஷ்ணகிரி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நம்பிபுரம் அரசு தொடக்கப்பள்ளியில், சமீபத்தில் ஆசிரியர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஆசிரியர்க ளுக்கான பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்றிட தமிழக முதல்& அமைச்சருக்கு தெரியப்ப டுத்தவும், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்க ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கோபி தலைமை தாங்கினார். துணை செயலாளர் சாதிக் உசேன் வரவேற்றார். ஆர்ப்பா ட்டத்தில், பணி பாதுகாப்பு சட்டம், அதன் அவசியம் பற்றி, மாவட்ட தலைவர் அருண் பிரகாஷ்ராஜ், மாவட்ட பொருளாளர் ஆனந்தகுமார் ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ஆசிரியர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், பணி பாதுகாப்பு சட்டம் பற்றியும், அனைவருக்கும் எடுத்துரைத்து, இதன் மீது தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி, இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்புச் சட்டத்தை ஏற்ற வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்க இந்த ஆர்ப்பாட்டம் நடப்பதாக விளக்கம் அளித்தார். மேலும் இது தொடர்பான கடிதத்தை முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தமிழக முதல்- அமைச்சருக்கு அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தார். இதில் ஓய்வு பிரிவின் மாவட்ட தலைவர் ரங்கப்பன், செயலாளர் ஜெய ஆரோக்கியசாமி, பொருளாளர் திம்மராயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன், மாவட்ட துணைச் செயலாளர் மரிய சாந்தி, பிரியதர்ஷினி, நளினி பிரியா, காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் ரமேஷ், சுதாகர் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News