செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஆர்.கே.ரவி தலைமையில் நடந்த போது எடுத்தபடம்.
கிருஷ்ணகிரியில் பா.ஜனதா பட்டியல் அணி செயற்குழு கூட்டம்
- திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும்.
- கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பழையப்பேட்டை பகுதியில் உள்ள குப்பை கிடங்கை மாற்ற வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணியின் செயற்குழு கூட்டம் நடந்தது.
ஜனதா நிர்வாகிகள் தீவிர உறுப்பினர் சேர்க் கையில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பழையப்பேட்டை பகுதியில் உள்ள குப்பை கிடங்கை மாற்ற வேண்டும், ஆர்.சி பள்ளி அருகில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி நகரில் உள்ள பெங்களூரு சாலையை டாக்டர். அம்பேத்கர் சாலை என மாற்ற வேண்டும். என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு மாவட்ட தலைவர் ஆர்.கே.ரவி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராகமாநில செயற்குழு உறுப்பினர் சூரியமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலா ளர்கள் மீசை அர்சுணன், கோவிந்தராஜ், பட்டியல் அணி பார்வை யாளர் திருமலைபெருமாள், பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர்கள், துணை தலைவர்கள், செயலாளர்கள், ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.