உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

Published On 2022-11-01 09:39 GMT   |   Update On 2022-11-01 09:39 GMT
  • தமிழ்நாடு , பஞ்சாப் அணிகளுக்கு சான்றிதழ் கோப்பைகள் வழங்கப்பட்டது.
  • ஆண்களுக்கான இறுதி போட்டி நடந்தது.

  அரவேணு,

கோத்தகிரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி அங்குள்ள ஜுட்ஷ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், கேரளா, குஜராத், பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநில அணிகள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான இறுதி போட்டி நடந்தது. இதனை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவுத்தர் மற்றும் பள்ளி தாளாளர் தன்ராஜன் தொடங்கி வைத்தனர். இதில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பஞ்சாப் அணி 25-23 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பஞ்சாப் அணி 25-19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட இறுதி போட்டியில் தமிழ்நாடு, பீகார் விளையாடியது. இதில் முதல் சுற்றில் தமிழ்நாடு அணி 25-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர் தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 2-வது சுற்றில் 25-20 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் ெவன்றது. வெற்றி பெற்ற தமிழ்நாடு , பஞ்சாப் அணிகளுக்கு சான்றிதழ் கோப்பைகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News