உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தனியாக பிரிக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்ற போது எடுத்த படம். 

காவேரிப்பட்டினத்தில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பயிற்சி முகாம்

Published On 2023-04-01 15:19 IST   |   Update On 2023-04-01 15:19:00 IST
  • பள்ளி மாணவர்களுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தனியாக பிரிக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
  • பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு முகாம் நடத்துவது தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தனியாக பிரிக்கும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு முகாம் நடத்துவது தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்கள் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தெளிவாக செயல் விளக்கம் மூலம் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. மாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்ப பேரணி வழியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் மஞ்சப்பை களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நகர பிரமுகர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் கலந்து கொண்டு இந்த ஒரு நாள் பயிற்சி முகாமை தொடக்கி வைத்தார். இம்முகாமில் சுமார் 600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் பேரூராட்சியின் சார்பில் கவுன்சிலர்கள் ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பள்ளியின் சார்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் சார்பில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த ஒரு நாள் பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News