உள்ளூர் செய்திகள்

குண்டூசியை விழுங்கிய எல்லேஷ். 

ஓசூரில், குண்டூசியை விழுங்கிய பள்ளி மாணவனுக்கு தீவிர சிகிச்சை

Published On 2022-08-17 15:27 IST   |   Update On 2022-08-17 15:27:00 IST
  • மாணவன் நேற்று குண்டூசியை முழுங்கி தண்ணீர் குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
  • ஸ்கேன் செய்தபோது, வயிற்றில் குண்டூசி இருந்தது தெரியவந்தது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள மோரனபள்ளி பகுதியை சேர்ந்த மாணவன் எல்லேஷ். இவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில், மாணவன் நேற்று குண்டூசியை முழுங்கி தண்ணீர் குடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் செய்தபோது, வயிற்றில் குண்டூசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, எல்லேசை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News