ஒகேனக்கல்லில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில்கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணைக்கட்டு கூடாது.
- நாங்குநேரி சம்பவத்தில் குற்றவாளி–களை தண்டிக்க வேண்டும்.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல்லில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 13-ம்ஆண்டு தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் டி.சி.தவமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.சரவணன் வரவேற்புரை–யாற்றினார். ஒன்றிய செய–லாளர் சண்முகம், மாவட்ட தலைவர் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர்கள் கண்ணன், திருப்பூர் சுடலை, திருவொற்றியூர் மாரிமுத்து, மாநில ஊடகப் பிரிவு செய–லாளர் சோதி குமரவேல் ஆகியோர் சிறப்பு விருந்தி–னராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது அவர்கள் பேசியதாவது:-
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணைக்கட்டு கூடாது, தமிழகத்திற்கு வழங்கக்கூடிய உபரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும், நாங்குநேரி சம்பவத்தில் குற்றவாளி–களை தண்டிக்க வேண்டும் என்றனர்.
இதில் ஒன்றிய தலைவர் செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சேட்டு, பாலக்கோடு ஒன்றிய செயலாளர் சண்முகம், பென்னாகரம் நகர செயலா–ளர் துரை, காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.