உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டையில்காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

Published On 2023-04-01 13:40 IST   |   Update On 2023-04-01 13:40:00 IST
  • பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போராட்டத்தில், கருப்பு சட்டை துணி அணிந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தேன்கனிக் கோட்டை,

காங்கிரஸ் கட்சி ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், கருப்பு சட்டை துணி அணிந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னதாக பேருராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 5வது வார்டு கவுன்சிலரும் மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் வெளி நடப்பு செய்தார்.

இதில் மாநில செயலாளர் அன்வர், நகர தலைவர் பால்ராஜ், தாஸ், சபியுல்லா, வெங்கடேஷ், மஹ்மூத், அசேன்ராஜா, மொஹம்மத், நஞ்சண்டன், ரஞ்சித், மஸ்ஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News