உள்ளூர் செய்திகள்

பென்னாகரம் சுற்று வட்டார பகுதிகளான பி.அக்ரகாரம், நாகதாசம்பட்டி, கெளரிசெட்டிப்பட்டி, பிளியனூர், பிக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கனமழை பெய்ததால் வெள்ளகாடான விளை நிலங்கள்.

தருமபுரியில் தொடர்ந்து பெய்யும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2022-08-05 10:17 GMT   |   Update On 2022-08-05 10:17 GMT
  • பாப்பிரெட்டிபட்டியில் அதிக அளவு மழை பெய்தது.
  • கொல்லப்பட்டியில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் தருமபுரி உட்பட மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவதிக்கு ஆளாகினர்.பாப்பிரெட்டிபட்டியில் அதிக அளவு மழை பெய்தது.

அரூர் சுற்று வட்டாரத்தில், நேற்று மதியம், 12:30 மணி முதல், அச்சல்வாடி, பேதாதம்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லுார் மற்றும் அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இரவு 7 மணிக்கு மேலாகியும் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பள்ளி, கல்லுாரி சென்ற மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினர்.

ஊத்தங்கரை அருகே கொல்லப்பட்டியில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை தனியார் திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார் சுற்றுவட்டாரத்தில் நேற்று பிற்பகல் மழை பெய்தது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழையால், மழை நீர் தேங்கி சாக்கடை கழிவுநீருடன் சேர்ந்து சாலையில் ஆறாக ஓடியது.இன்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

Tags:    

Similar News