உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்

Published On 2022-07-05 13:56 IST   |   Update On 2022-07-05 13:56:00 IST
  • தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை அமல்படுத்தவில்லை.
  • நீட் தேர்விற்கு எதிரான போக்கை கடைபிடிப்பதை கண்டித்தும் உண்ணாவிரதம்.

தருமபுரி,

தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை அமல்படுத்த தவறிய காரணத்தினாலும், பெட்ரோல், டீசல் விலையில் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவராமல் இருப்பதற்கும், நீட் தேர்விற்கு எதிரான போக்கை கடைபிடிப்பதை கண்டித்தும் பா.ஜ.க.வினர் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு தி.மு.க. அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News