ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
தருமபுரியில் சலூன் கடையை இடித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் சுய லாபத்திற்காக இடித்து தள்ளி விட்டதாக தெரிகிறது.
- கம்யூனிஸ்ட் கட்சியினர் தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேவுள்ள மானியதள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர். இவர் அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையை மானியதள்ளி பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் சுய லாபத்திற்காக இடித்து தள்ளி விட்டதாக தெரிகிறது. இதனை கண்டித்தும், பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர், மக்கள் அதிகாரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரியிலுள்ள சலூன் கடைகள் மூடி முடி திருத்தும் தொழிலாளர்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்ய வேண்டும், இடிக்கப்பட்ட கடையினை மீண்டும் கட்டி தரவேண்டும் என கூறியும் கோஷமிட்டனர்.