உள்ளூர் செய்திகள்

கூட்டத்திற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி.

தருமபுரியில் மத்திய கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்

Published On 2022-09-16 09:26 GMT   |   Update On 2022-09-16 09:26 GMT
  • கூட்டுறவு பொது பேரவை கூட்டம் தருமபுரி குண்டலப்பட்டியில் நடைபெற்றது.
  • 2021–-2022-ம் ஆண்டு வங்கி நிகர லாபமாக ரூ.14 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரம் ஈட்டிஉள்ளது என்று வங்கி தலைவர் தெரிவித்தார்.

தருமபுரி,

மத்திய வங்கியின் 56-வது கூட்டம் தருமபுரி மாவட்ட கூட்டுறவு பொது பேரவை கூட்டம் தருமபுரி குண்டலப்பட்டியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றினார்.

துணைத் தலைவர் எம். கே.வேலுமணி, மாவட்டகூட்டுறவு ஒன்றிய தலைவர் எம்.பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வங்கியின் மேலாண்மை இயக்குனரும், கூட்டுறவு இணைப்பதிவாளருமான எம்.சந்தானம் வரவேற்றார்.

கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 2021–-2022-ம் ஆண்டு வங்கி நிகர லாபமாக ரூ.14 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரம் ஈட்டிஉள்ளது என்று வங்கி தலைவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் வங்கியின் முதன்மை வருவாய் அலுவலரும், கூட்டுறவு துணைப் பதிவாளருமான கே.டி.சரவணன், தருமபுரி சரக கூட்டுறவு துணை பதிவாளர் டி.எஸ்.மணிகண்டன், கிருஷ்ணகிரி சரக கூட்டுறவு துணைப் பதிவாளர் ஏ.செல்வம், வங்கி பொது மேலாளர் ஜி.அமுதா மற்றும் வங்கி இயக்குனர்கள், அலுவலர்கள், உறுப்பி னர்கள், பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.

முடிவில் வங்கி உதவி பொது மேலாளர் எல்.ரவி. நன்றி கூறினார்.

Tags:    

Similar News