உள்ளூர் செய்திகள்

கோவையில் மாணவரிடம் கல்வி சான்றிதழ்களை பெற்று மோசடி

Published On 2022-08-18 10:18 GMT   |   Update On 2022-08-18 10:24 GMT
  • தனியார் அறக்கட்டளை நிறுவனரை போலீசார் கைது செய்தனர்.
  • மாணவர் கல்லூரிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதுடன் எதிர்காலம் கேள்விக்குறியானது.

கோவை:

கும்பகோணத்தை சேர்ந்த ரவிக்குமார். இவரது மகன் அக்னீஸ்வரன் (வயது17).இவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். அவரிடம் சிறந்த கல்லூரியில் விரும்பும் பாடத்திட்டத்தில் சேர தாங்கள் உதவி செய்வதாக கோவை ரத்தினபுரியில் செயல்பட்டு வரும் தனியார் அறக்கட்டளையினர் தொடர்பு கொண்டு கூறினர். இதனையடுத்து மாணவர் அக்னீஸ்வரன் அறக்கட்டளை அலுவலகத்திற்கு தன்னிடமுள்ள கல்வி அசல் சான்றிதழ்களை அனுப்பினார். இதற்கு கட்டணமாக அறக்கட்டளையினர் ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளனர். அதற்கு மாணவர் ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் அறக்கட்டளை நிர்வாகம் சான்றிதழ்களை பெற்று விட்டு 20 நாட்களை தாண்டியும் மாணவனின் அசல் சான்றிதழ்களை திருப்பி கொடுக்க வில்லை. கல்லூரியிலும் இடம் வாங்கி கொடுக்க வில்லை. இதனால் மாணவர் கல்லூரிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதுடன் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இதனால் சம்பவத்தன்று அறக்கட்டளை அலுவலகம் முன்பு அக்னிஸ்வரனின் தந்தை ரவிக்குமார் மற்றும் சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

இதையடுத்து மாணவரின் தந்தை ரவிக்குமார் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் சான்றிதழ்களை பெற்றுத் தருமாறு புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் மாணவரின் சான்றிதழை பெற்று திருப்பி கொடுக்காத அறக்கட்டளை நிறுவனர் செல்வம் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் இதுபோன்று யாரிடமாவது மோசடி செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News