உள்ளூர் செய்திகள்
கோவையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
- ரமேஷ் வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
- உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருந்தது.
கோவை,
கோவை ராமநாதபுரம் ஸ்ரீபதி நகரில் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக ரமேஷ் (வயது 58) என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி ரமேஷ் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.