உள்ளூர் செய்திகள்

குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-12-08 14:53 IST   |   Update On 2022-12-08 14:53:00 IST
  • கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
  • மனமுடைந்து காணப்பட்ட மல்லப்பா நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள இருதுகோட்டை பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா (வயது49). இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் உள்ளன. தற்போது மல்லப்பா 2-வது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மல்லப்பாவுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்து காணப்பட்ட மல்லப்பா நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News