உள்ளூர் செய்திகள்

விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது எடுத்த படம். அருகில் பேரூராட்சி துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் உள்ளனர்.

பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெற்றால் அவர்களின் குடும்பம் மேம்படும்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2023-07-26 09:02 GMT   |   Update On 2023-07-26 09:02 GMT
  • மாணவர்கள் விளையாட்டு துறையிலும் மேம்பட முதல்-அமைச்சர் கோப்பை என்ற திட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடை முறைப்படுத்தியுள்ளார்.
  • மேலும் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 11-ம் வகுப்பு மாணவி ஜெயராணிக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி யில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை தாங்கி னார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத்தலைவர் கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் உதவி கலெக்டர் குரு சந்திரன், தாசில்தார் வாமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்புலெட்சுமி வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக கால்நடை துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர்கள் விளையாட்டு துறையிலும் மேம்பட முதல்-அமைச்சர் கோப்பை என்ற திட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடை முறைப்படுத்தியுள்ளார்.

மாணவிகள் உயர்கல்வி பெற்றால் தான் அவர்களின் குடும்பம் மேம்படும். அதன் மூலம் தமிழகமும் பெருமை அடையும். அதனால் தான் இவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப் படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 11-ம் வகுப்பு மாணவி ஜெயராணிக்கு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ராம ஜெயம், அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், உதவி திட்ட அலுவலர் முனியசாமி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் உறுப்பினர் வாள்சுடலை, ஆறுமுகநேரி நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், ஆறுமுகநேரி பேரூராட்சி கவுன்சிலர்கள் வெங்க டேசன், ஆறுமுகநயினார், சந்திரசேகர், லெட்சுமணன், புனிதா சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News