உள்ளூர் செய்திகள்

கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டபோது எடுத்த படம்.

செய்துங்கநல்லூரில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை

Published On 2022-12-19 14:40 IST   |   Update On 2022-12-19 14:40:00 IST
  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை தாங்கினார்.
  • சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார்.

செய்துங்கநல்லூர்:

செய்துங்கநல்லூரில் அமைப்பு சாரா தொழிலாளர்க ளுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. சமுதாய நலக்கூடத்தில் ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில் நடந்த விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராமஉதயம் மேலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டையை வழங்கினார். தனி அலுவலர் ராமசந்திரன் வரவேற்புரை ஆற்றினார். பகுதி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் மஞ்சள்பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் விஜய ஏஞ்சல், விஜயகுமாரி, ஆறுமுககனி, செல்வன்துரை, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News