உத்திரமேரூரில் தேவாலயத்தில் உண்டியல் திருட்டு
- தேவாலயத்தில் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு உண்டியலை பெயர்த்து எடுத்துச்சென்றவர்களை தேடி வருகின்றார்.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தில் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அந்த உண்டியலை மர்ம நபர்கள் பெயர்த்து திருடி சென்று விட்டனர். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு உண்டியலை பெயர்த்து எடுத்துச்சென்றவர்களை தேடி வருகின்றார்.
இந்த தேவாலயத்தின் திருவிழா கடந்த வாரம் முடிவுற்றது. 2 மாதமாக இந்த உண்டியல் திறக்கப்படவில்லை என்று தேவாலய பாதிரியார் நேவிஸ் ராயர் தெரிவித்தார். மேலும் இதில் எந்த அளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை திருவிழா நடந்து முடிந்திருப்பதால் கண்டிப்பாக அதிக அளவில் பணம் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கு முன்பும் இந்த தேவாலயத்தில் இதே போன்ற சம்பவம் 2 முறை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.