உள்ளூர் செய்திகள்
சதுரகிரி கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
- வைகாசி மாத பவுர்ணமியான நேற்று பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
- சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஒரு உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்து உள்ளது. வைகாசி மாத பவுர்ணமியான நேற்று பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக நேற்று அதிகாலை நேரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஒரு உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.