உள்ளூர் செய்திகள்
திருக்குறுங்குடியில் வீடு புகுந்து பொருட்கள், பணம் திருட்டு
- திருக்குறுங்குடி மேலநம்பி தோப்பை சேர்ந்தவர் ரவி . இவரது வீட்டு கார் செட்டில் கட்டுமான பணி நடந்து வருகிறது.
- ரவி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வள்ளியூருக்கு சென்று விட்டார்.
களக்காடு:
திருக்குறுங்குடி மேலநம்பி தோப்பை சேர்ந்தவர் ரவி (வயது52). இவரது வீட்டு கார் செட்டில் கட்டுமான பணி நடந்து வருகிறது. கட்டுமான பணியில் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரத்தை சேர்ந்த செல்வலிங்கமும், தொழிலாளர்களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரவி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வள்ளியூருக்கு சென்று விட்டார்.
இதனை கவனித்த செல்வலிங்கம் வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், ரூ. 26 ஆயிரம் ஆகியவற்றை திருடியுள்ளார். மேலும் ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதுபற்றி ரவி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக கட்டிட தொழிலாளி செல்வலிங்கத்தை தேடி வருகின்றனர்.