உள்ளூர் செய்திகள்

ஆறு.சரவணத்தேவர்.

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்- முக்குலத்து புலிகள் கட்சி வலியுறுத்தல்

Published On 2022-09-20 13:46 IST   |   Update On 2022-09-20 13:46:00 IST
  • இதுவரை 368 பேருக்கு இன்ப்ளுயன்சா காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 69 பேருக்கு இன்ப்ளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்:

முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மர்ம காய்ச்சலாலால் அதிகம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 368 பேருக்கு இன்ப்ளுயன்சா காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில், 5 வயதுக்கு கீழ் 42 குழந்தைகளுக்கும், 5 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்கள் 65 பேருக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 69 பேருக்கும் இன்ப்ளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குடும்பத்தில் கூட சிறுவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே மாணவர்களின் நலனை கருத்தில் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தொடர் விடுமுறை விட ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News