தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி
- இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையை சீனா கருதுகிறது.
- முற்றத்தில் மாவீரா்களுக்கு சுடரேந்தி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் விளாா் சாலையிலுள்ள முள்ளிவா ய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்வு மற்றும் முற்றத்தின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
இதில் உலகத் தமிழா் பேரமைப்பு தலைவா் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்திய பிரபாகரனுக்கு எந்த நாடும் உதவி செய்யவில்லை.
உலகம் முழுவதும் வாழும் தமிழா்கள் கொடுத்த நிதியின் மூலம் ஆயுதங்களை வாங்கிப் போராடினா். சிங்கள ராணுவத்தை முறியடித்து கைப்பற்றிய ஆயுதங்களும் அவா்களுக்கு உதவின.
அதை ஒடுக்குவதற்காக சிங்கள அரசுக்கு இந்தியா, சீனா உள்பட 20-க்கும் அதிகமான நாடுகள் ராணுவம் உள்பட அனைத்து உதவிகளையும் செய்தன.
அதன் விளைவாக, தமிழீழ போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்திய விடுதலைப் போராட்டத்திலும்கூட இடையில், பின்னடைவு ஏற்பட்டாலும், பின்னாளில் வெற்றி பெற்றது.
அதுபோல, தமிழீழ விடுதலைப் போராட்டமும் வெற்றி பெறும்.
இலங்கைக்கு சீனாவும் உதவி செய்கிறது.
இலங்கை யால் சீனாவுக்கு எந்த லாபமும் கிடையாது ஆனால், இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையை சீனா கருதுகிறதுஎனவே, இலங்கையில்கா லூன்றிய சீனாவால் ஈழத்தமி ழா்களுக்கு அபாயம் அல்ல.
தென்னிந்தியாவுக்கு த்தான் பேரபாயம். இதை தில்லியில் இருப்பவா்கள் (இந்திய அரசு) உணர வேண்டும். இல்லாவிட்டால் விளைவு மோசமாகிவிடும் .
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, முற்றத்தில் மாவீரா்களுக்கு சுடரேந்தி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் செஞ்சி ந. ராமச்சந்திரன், உலகத் தமிழா் பேரமைப்புத் துணைத் தலைவா்கள் அய்யனாபுரம் சி.முருகேசன், மணிவண்ணன், துணைச் செயலா் துரை. குபேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.