தண்ணீரில் மூழ்கி குளம் போல் காட்சியளிக்கும் உப்பளம்.
மரக்காணத்தில் கனமழை: உப்பு உற்பத்தி அடியோடு பாதிப்பு
- 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- இப்பகுதியில் வழக்கம்போல் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
விழுப்புரம்:
மரக்காணத்தில் மத்திய மாநில, அரசுகளுக்கு சொந்த மான சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இங்கு உப்பு உற்பத்தி ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையில் நடைபெறுவது வழக்கம். இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த உப்பு உற்பத்தி தொழிலை நம்பி இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இப்பகுதியில் வழக்கம் போல் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்பொழுது தீவிரம் அடைந்துள்ள வடகிழக்கு பருவ மழையால் மரக்காணம் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வக்கீகம் கால்வாயில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இப்பகுதியில் பெய்து வரும் கனமழையோடு பக்கிங்காம் கால்வாயில் இருந்து வரும் தண்ணீரும் கலப்பதால் உப்பளங்கள் அனைத்தும் மூழ்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் தொழிலை நம்பி இருக்கும் தொழிலா ளர்களும் வேலையில்லாமல் அவதிப்படும் நிலைஉள்ளது. இங்கு மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க குறை ந்தது 3 மாதத்திற்கு மேல் ஆகும் என்று உப்பு உற்பத்தி யாளர்கள் கூறுகின்றனர்.