உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் 3-வது நாளாக விடிய, விடிய பெய்த மழை

Published On 2022-07-28 09:35 GMT   |   Update On 2022-07-28 09:35 GMT
  • 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்துள்ளது.
  • மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி ரோடுகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் நேற்று 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்துள்ளது. குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது.

இதனால் கோபிசெட்டிபாளையம், மொடச்சூர், குள்ளப்பாளையம், வெள்ளாளபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேப்போல் கொடிவேரி, சத்தியமங்கலம், குண்டேரிபள்ளம், பெருந்துறை, கவுந்தப்பாடி, வரட்டுபள்ளம் போன்ற பகுதிகளும் விடிய, விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கோபி-94, கொடிவேரி-72, சத்தியமங்கலம்-58, குண்டேரி பள்ளம்-56, பெருந்துறை-27, கவுந்தப்பாடி-26.8, வரட்டு பள்ளம்-11, தாளவாடி-10.4, பவானிசாகர்-8.20, சென்னிமலை-7, நம்பியூர்-2.

Tags:    

Similar News