உள்ளூர் செய்திகள்

மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை

Published On 2022-07-01 00:10 IST   |   Update On 2022-07-01 00:10:00 IST
  • சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
  • தொடர் மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

சென்னை:

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இரவு 9.30 மணியளவில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இடி மின்னலுடன் பெய்யத் தொடங்கிய கனமழை போரூர், குன்றத்தூர், மவுலிவாக்கம், கொரட்டூர், தி.நகர், எழும்பூர், வடபழனி, சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், கிண்டி, அசோக்நகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேலும், சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் என பரவலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர் மழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குளிர்ச்சி நிலவிதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News