உள்ளூர் செய்திகள்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சுகாதாரத்துறை அமைச்சர் 10-ந்தேதி தென்காசி வருகை

Published On 2022-07-06 09:17 GMT   |   Update On 2022-07-06 09:17 GMT
  • தென்காசியில் நடைபெறும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிடுகிறார்.
  • சங்கரன்கோவிலில் மக்கள் நல்வாழ்வை வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் மராத்தான் போட்டியை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

தென்காசி:

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிறார்.

வரவேற்பு

இதற்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக மாலை 3.45 மணி அளவில் தென்காசிக்கு வருகை தரும் அமைச்சருக்கு தென்காசி இடைகாலில் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

தொடர்ந்து தென்காசியில் நடைபெறும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை பார்வையிடுகிறார்.

மாலை 4 மணிக்கு ஆய்குடி அமர்சேவா சங்கத்திற்குட்பட்ட விந்தன்கோட்டையில் உள்ள அமர் அப்துல்கலாம் மறுவாழ்வு பழத்தோட்டத்தை திறந்து வைக்கிறார். அதன்பின் அமர்சேவா சங்கத்தின் 40-வது வருட ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென்காசியில் ஓய்வெடுக்கிறார்.

மறுநாள் காலையில் சங்கரன்கோவிலில் மக்கள் நல்வாழ்வை வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் மராத்தான் போட்டியை தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி அமர்சேவா சங்கத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News