பஸ்சில் தவற விட்ட பணம் மற்றும் செல்போனை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் அருகே பஸ்சில் தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
- வேடசந்தூர் பஸ்நிலையத்தில் இறங்கி அவர் மற்றொரு பஸ்சில் ஏற முயன்ற போது பஸ்சிலேயே தனது பணப்பை மற்றும் செல்போனை மறந்து விட்டது தெரிய வந்தது.
- நகர் தெற்கு போக்குவரத்து போலீஸ் ஏட்டு அந்த பஸ்சை மறித்து சோதனை செய்ததில் பணப்பை மற்றும் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்படவே அதனை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்தவர் ராஜா மனைவி நாகஜோதி (வயது 30). இவர் ஈரோட்டில் இருந்து தனது தாய் வீட்டுக்கு மதுரை நோக்கி அரசு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். வேடசந்தூர் பஸ்நிலையத்தில் இறங்கி அவர் மற்றொரு பஸ்சில் ஏற முயன்ற போது பஸ்சிலேயே தனது பணப்பை மற்றும் செல்போனை மறந்து விட்டது தெரிய வந்தது.
ஆனால் அதற்குள் பஸ் புறப்பட்டு விடவே வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் நாகஜோதி புகார் அளித்தார். போலீசார் வாக்கி டாக்கி மூலம் இது குறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அஞ்சலி ரவுண்டானா அருகே பஸ் வந்த போது நகர் தெற்கு போக்குவரத்து போலீஸ் ஏட்டு அந்த பஸ்சை மறித்து சோதனை செய்தார்.
பஸ்சில் பணப்பை மற்றும் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்படவே அதனை நாகஜோதியிடம் போலீசார் ஒப்படைத்தனர். தவற விட்ட பணம் கிடைக்குமோ என்ற அச்சத்தில் கதறி அழுத நாகஜோதி போலீசாரின் துரித முயற்சியால் கிடைக்கப்பெற்றது குறித்து அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.