உள்ளூர் செய்திகள்
புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற மளிகைக்கடை உரிமையாளர் கைது
- 85 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
குனியமுத்தூர்,
கோவை சாரமேடு ராயல் நகரில் உள்ள ஒரு மளிகைக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து குனியமுத்தூர் போலீசார் தகவல் வந்த இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.
சோதனையில் மளிகைக்கடை உரிமையாளர் குமரேசன் ( வயது 48) என்பவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு இருந்து 85 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கடை உரிமையாளர் குமரேசனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.