உள்ளூர் செய்திகள்

தபால் துறை சார்ந்த குறை தீர் கூட்டம்: குறைகளை தெரிவிக்க அழைப்பு

Published On 2022-12-21 15:16 IST   |   Update On 2022-12-21 15:16:00 IST
  • ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
  • பதிவு செய்யப்பட்ட அலுவலகம், விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மண்டல அளவிலான தபால்துறை சார்ந்த குறைதீர்ப்பு நாள் கூட்டம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதியன்று காலை 11 மணியளவில் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள, அஞ்சல் மேற்கு மண்டல

அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகார்களை வருகிற 21-ந் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், நீங்கள் அனுப்பும் புகார்களில் முழு விவரங்களும், அதாவது தபால் அனுப்பிய தேதி, அனுப்புநர் மற்றும் பெறுநர் விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும். பதிவு தபால், எம்.ஓ., வி.பி., இன்சூர்டு லெட்டர் மற்றும் விரைவு தபால் ஆகியவைகளுக்கு பதிவு எண், பதிவு செய்யப்பட்ட அலுவலகம், விலாசம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும்.

அஞ்சல் சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களுக்கு கணக்கு எண், பாலிசி எண், கணக்கு வைத்திருப்பவர் மற்றும் காப்பீட்டாளரின் பெயர் மற்றும் விலாசம், அஞ்சல் அலுவலகத்தின் பெயர், பணம் செலுத்தப்பட்ட விவரம் போன்றவை குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News