உள்ளூர் செய்திகள்

மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற காட்சி. 

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை சுட ஆணை வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

Published On 2023-11-25 06:47 GMT   |   Update On 2023-11-25 06:47 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சத்தி யநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டும் மனுவாக பெறுவதற்கும், ஒவ்வொரு மாதத்திலும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதி களுடான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் அளிக்கும் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இதேபோல்இக்கூட்டத்தில் விவசாயிகள் கரும்பு லாரிகளில் கொண்டு செல்லு ம்போது வழித்தடங்களில்

மின்கம்பங்கள் மோதாமல் இருப்பதற்கு ஏதுவாக மின்கம்பிகளை உயர்த்திடவும், விளை நிலங்களில்பயிர்களை அதிகமாக சேதப்படுத்தும் காட்டுபன்றிகளை சுடு வதற்கு விவசாயிகளுக்கு ஆணையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கள்களில் பயிர்கடன்களில் விதை உரம் மற்றும் இதரஇடுபொருட்கள் வழங்குவதற்கு பதிலாக பணமாக வழங்கிடவும், கறவை மாடுகள் வளர்ப்ப தற்கு தேசியவங்கிகள் மூலம் கடன் வழங்கிடவும் கோரிக்கை வைத்தனர்.விவசாய நிலங்களில் கழிவு நீர் வெளியேற்றுவதை தடுத்திடவேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரம், தோட்டக்கலை துணை இயக்குநர் சசிகலா, மேலாண்மை இயக்குநர் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை முருகேசன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் நந்தகுமார், தமிழ்நாடு மின்சார வாரியம்மேற்பார்வைப் பொறியாளர்(பொறுப்பு) கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், கண்காணிப்பு பொறி யாளர் தமிழ்நாடு மின்சார வாரியம்(பொறுப்பு)கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க பிரதிநிதிகள், விவ சாயிகள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News