உள்ளூர் செய்திகள்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 25 பழங்குடியினருக்கு பசுமை குடில் வீடுகள்

Published On 2023-01-27 14:43 IST   |   Update On 2023-01-27 14:43:00 IST
  • நெடுகுளா ஆகிய கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
  • 25 பழங்குடியினருக்கு ரூ.3 லட்சம் செலவில் கட்டப்பட்ட பசுமை குடில் வீடுகள் வழங்கப்பட்டது.

அரவேணு,

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 ஊராட்களில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கொணவக்கரை, ஜக்கனாரை, கெங்கரை, தேனாடு, நடுஹட்டி, கோடநாடு, நெடுகுளா, குஞ்சப்பனை தெங்குமரஹடா, கடினமலா, அரக்கோடு, நெடுகுளா ஆகிய கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நடுஹட்டி ஊராட்சி கெட்டிகம்பை கிராமத்தில் தலைவர் அரக்கம்பை கிருஷ்ணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். மேலும் கொணவக்கரை ஊராட்சி சார்பில் மேல்கூப்பு கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் ஜெயபிரியா தலைமை தாங்கினார். அப்போது தமிழக அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 25 பழங்குடியினருக்கு ரூ.3 லட்சம் செலவில் கட்டப்பட்ட பசுமை குடில் வீடுகள் வழங்கப்பட்டது. இதில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து ஜக்கனாரை ஊராட்சியில் தலைவர் சுமதி சுரேஷ், கெங்கரை ஊராட்சியில் தலைவர் முருகன், கொடநாடு ஊராட்சியில் தலைவர் சுப்பிகாரி, தேனாடு ஊராட்சியில் தலைவர் ஆல்வின், குஞ்சப்பணை ஊராட்சியில் தலைவர் இம்மானுவேல் மணிகண்டன், தெங்குமரஹடா தலைவர் மனோகரன், நெடுகுளா தலைவர் சுகுணா சிவா மற்றும் அரக்கோடுதலவர் சாந்தி, கடினமலா தலைவர் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

Tags:    

Similar News