உள்ளூர் செய்திகள்
கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்ட காட்சி.
இலத்தூர் பாரத் கல்வியியல் கல்லூரியில் பசுமை நாள் விழா
- பேராசிரியர்களான ஜோஸ்பின் அனிதா, ராஜமுருகேஸ்வரி ஆகியோர் “இயற்கை மனிதனுக்கு ஆற்றும் மகத்தான பங்கு” குறித்து தங்கள் கருத்துக்களை வழங்கினார்கள்.
- கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
தென்காசி:
இலத்தூர் பாரத் மகளிர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற பசுமை நாள் விழாவில் கல்லூரியின் முதலாமாண்டு மாணவி நேசமாரியம்மாள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் ஆறுமுகராஜன் , பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், கல்லூரியின் செயலர் காந்திமதி மோகனகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் கல்வி ஒருங்கிணைப்பாளரான கிருபா ஜோஸ்லின், பேராசிரியர்களான ஜோஸ்பின் அனிதா, ராஜமுருகேஸ்வரி ஆகியோர் "இயற்கை மனிதனுக்கு ஆற்றும் மகத்தான பங்கு" குறித்து தங்கள் கருத்துக்களை வழங்கினார்கள்.
கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவிகள் இயற்கை குறித்த பேச்சுப்போட்டி, நடனம், ஓவியம் வரைதல் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். மாணவி நூர்ஜமிலா நன்றி கூறினார்.