உள்ளூர் செய்திகள்

வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூவிடம் மனு அளித்த மக்கள்.

மாஞ்சோலை அருகே பல்லுயிர் பெருக்க பூங்கா அமைய உள்ள இடத்தில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு

Published On 2023-06-03 09:27 GMT   |   Update On 2023-06-03 09:27 GMT
  • பூங்கா அமைக்க காக்காச்சி, மாஞ்சோலையை சேர்த்து 3 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
  • வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும் வனத்துறையினர் அனுமதி வழங்க கோரி மனு அளித்தனர்.

கல்லிடைக்குறிச்சி:

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் உள்ள காக்காச்சி என்ற பகுதியில் ரூ.7 கோடி மதிப்பில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இந்த பூங்கா அமைய இருக்கும் நிலையில் பல்லுயிர் பூங்கா அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்ய அரசு சுற்றுசூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ நேற்று ஆய்வு செய்தார். அம்பை வனச்சரக அலுவலகர் நித்யா உடனிருந்தார்.பூங்கா அமைக்க காக்காச்சி, மாஞ்சோலையை சேர்த்து 3 இடங்களை ஆய்வு செய்த பின்னர் அவர்கள் திரும்பினர். அப்போது வனத்துறை அதிகாரியை மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மணிமுத்தாறு சுற்று வட்டார பகுதியை சுமார் 100-க்கும் மேற்பட்ட வர்கள் நேரில் சந்தித்து அவரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

அந்த மனுக்களில், வனப்பகுதியில் அமைந்துள்ள வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்தி ரையாகவும், இருசக்கர வாகனத்தில் செல்லவும் வனத்துறையினர் அனுமதி வழங்க கோரி மனு அளித்தனர். மேலும் அவர்களின் நீண்ட நாள் கோரி க்கையான கோவி லுக்கு மின்சாரம் வழங்குவது குறித்தும் மனு அளித்தனர்.

அப்போது மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி அந்தோணியம்மாள், நகர செயலாளர் முத்துகணேஷ், ஜமீன் சிங்கம்பட்டி ஊரா ட்சி தலைவர் செந்தில்குமார், ஊர் நாட்டாமை சட்ட நாதன், துணை நாட்டாமை மாரியப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் இருந்தனர்.

Tags:    

Similar News