உள்ளூர் செய்திகள்

வீடு கட்டுவதற்கு மணல் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும்

Published On 2022-09-20 08:19 GMT   |   Update On 2022-09-20 08:19 GMT
  • மலைகளை உடைத்து அவைகளை அரைத்து மணல் போல் விற்பனை செய்கின்றனர்.
  • கிராமங்களில் கிடைக்கும் மணல்களை எடுத்து வேதாரண்யம் பகுதிகளில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வண்டுவாஞ்சேரி, தாணிக்கோட்டகம், மணக்காடு, கரியாப்பட்டினம், செட்டிபுலம், செம்போடை, புஷ்பவனம், பெரியகுத்தகை, நெய்விளக்கு ஆகிய கிராம ங்களில் சிமெண்ட்டுடன் கலக்கும் வகையிலான பெருமணல்கள் உள்ளன.

இவைகளையே, அப்பகுதி மக்கள் காலங்காலமாக பயன்படுத்தி வந்தனர். ஒரு டிராக்டர் ரூ.1500-க்கு கிடைத்து வந்தது.

ஆனால் தற்போது இவைகளை பயன்படுத்தக்கூடாது, எடுத்தால் வழக்கு போடப்படுகிறது என அறிவிப்பு வந்தது.

இதனால் பல கிலோ மீட்டர் தூரம் சென்று மலைகளை உடைத்து அவைகளை அரைத்து மணல் போல் விற்பனை செய்கின்றனர்.

அவைகள் விலையும் அதிகமாகும்.எனவே, கிராமங்களில் கிடைக்கும் மணல்களை எடுத்து வேதாரண்யம் பகுதிகளில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தால் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த நன்மை அளிப்பதாக இருக்கும்.

மேலும், மணல் எடுக்கும் இடங்களில் மழைநீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயருமே தவிர வேறு எந்த பாதிப்பும் இருக்காது.

எனவே, மணல் எடுக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் இளம்பாரதி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News