உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 20 பேர் டாக்டர் படிப்பில் சேர்ந்தனர்

Published On 2022-11-16 09:21 GMT   |   Update On 2022-11-16 09:21 GMT
  • நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 20 மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
  • அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல்:

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு இடம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பாண்டில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 20 மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்கள் படித்த பள்ளி மற்றும் பெயர் விவரம் வருமாறு:-

புதுச்சத்திரம் அரசு பள்ளி மாணவர் முகேஷ், ராசிபுரம் அண்ணா சாலை அரசு பள்ளி மாணவர் தரண்ராஜ், மாணவி ரம்யா ஸ்ரீ, பள்ளிப்பாளையம் அரசு மகளிர் பள்ளி மாணவி ரோகிணி தங்கம், பாச்சல் அரசு பள்ளி மாணவி பூமிகா, வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நவீன் குமார், கமலகாந்த், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்தி, கொல்லிமலை மாதிரி பள்ளி மாணவர் வெற்றி முருகன், ஆர். புதுப்பாளையம் அரசு பள்ளி மாணவர் ஜெயபாரதி, முத்துக்காப்பட்டி அரசு பள்ளி மாணவர் சுந்தரமூர்த்தி, சேந்தமங்கலம் அரசு மகளிர் பள்ளி மாணவி சுந்தரி, பாண்டமங்கலம் அரசு மகளிர் பள்ளி மாணவி வேத ஸ்ரீ, வளையபட்டி அரசு பள்ளி மாணவி சினேகா, திருச்செங்கோடு அரசு ஆண்கள் பள்ளி மாணவர் நாகேஸ்வரன், வேலகவுண்டம்பட்டி அரசு பள்ளி மாணவி சபித்ரா, வெண்ணந்தூர் மற்றும் எருமப்பட்டி அரசு பள்ளி மாணவிகள் கோமதி, நித்தியா ஸ்ரீ, வெண்ணந்தூர் அரசு பள்ளி மாணவர் கவின் கண்ணா, வலையபட்டி அரசு பள்ளி மாணவி திரிஷா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News