உள்ளூர் செய்திகள்

அரசு குடியிருப்பு மேற்கூரையில் கான்கிரீட் சேதமடைந்து உதிர்ந்து கிடக்கும் காட்சி.

அரசு குடியிருப்புகள் பழுதால் குடிசை அமைத்து வசிக்கும் மக்கள்

Published On 2023-01-03 15:07 IST   |   Update On 2023-01-03 15:07:00 IST
  • குடிசையிட்டு மழை, வெயிலில் ஆபத்தான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.
  • குடியிருப்பில் குடியிருக்காமல் அருகே உள்ள தேவாலயத்தின் முன் பகுதியில் இரவு தங்கி கொள்வதாக கூறினர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி பகுதியான ராயக்கோட்டை-ஒசூர் சாலை ஒரமாக இருளர் இனத்தவர்கள் 300 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 19 வருடத்திற்கு முன்பு 20 தொகுப்பு குடியிருப்புகளை அரசு சார்பில் கட்டி கொடுத்தனர். அந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர்.

தற்போது பல குடியிருப்புகள் பழுதாகி குடிருப்பு கூரையின் மேல் பகுதியில் உள்ள கான்கிரீட் பெயந்து இடிந்து விழும்நி லை உள்ளதால் அந்த குடியிருப்பில் குடியிருக்காமல் அருகே உள்ள தேவாலயத்தின் முன் பகுதியில் இரவு தங்கி கொள்வதாக கூறினர்.

மேலும் தற்போது குடும்பங்கள் பெருகிவிட்டதால் அப்பகுதியிலே சிறிய, சிறிய குடிசையிட்டு மழை, வெயிலில் ஆபத்தான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

இதை அறிந்த உத்தன ப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்த் நேரில் சென்று பார்வை யிட்டு அரசு அதிகாரிகளுக்கு நிறை, குறைகளை எடுத்து கூறி ஆவண செய்வதாக கூறி உள்ளார். 

Tags:    

Similar News