உள்ளூர் செய்திகள்

விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்தது.

அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்- 18 பயணிகள் படுகாயம்

Published On 2022-08-04 09:17 GMT   |   Update On 2022-08-04 09:17 GMT
  • 2 பஸ்களிலும் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
  • இதனால் சீர்காழி புறவழிச்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சீர்காழி :

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் புறவழிச் சாலையில் கோவில்பத்து அருகே புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி புதுச்சேரி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

இதேப்போல் எதிரே பொறையாரில் இருந்து சிதம்பரம் நோக்கிச் தமிழ்நாடு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த 2 பஸ்களிலும் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.அப்போது கண்ணிமை க்கும் நேரத்தில் 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் பஸ்கள் பலத்த சேதமடைந்தது. மேலும் பயணிகள் 18 -க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 18 பேரையும் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தால் சீர்காழி புறவழிச் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து நடந்த பகுதியில் நான்கு வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வரும் நிலையில் அதற்காக பாலம் கட்டப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் சாலை குறுகியதாக உள்ளதால் இரண்டு பஸ்களும் ஒரே நேரத்தில் கடக்க முற்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவி த்தனர்.

Tags:    

Similar News